13வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடூர தந்தை!
தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கர்நாடகா, ஜீவர்கி பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும், வாந்தி மயக்கம் என அவதிப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக உடல்நிலை சரியாகாத நிலையில் அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார். சிறுமியின் தாயார் வயல் வேலைக்கு சென்றபோது, தந்தை தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை கூறியுள்ளார்.
தந்தை கொடுமை
இதைத் தொடர்ந்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் புகார் குறித்து அறிந்த தந்தை தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.
அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.