“திருத்தவே முடியாது போல” - தர்மபுரியில் 13 வயது சிறுமியை கடத்தி திருமணம்

dharmapuri schoolgirlkidnapped
By Petchi Avudaiappan Oct 25, 2021 07:35 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

தர்மபுரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி கடத்தி திருமணம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி  மாவட்டம் காரிமங்கலம் அடுத்த முருக்கம்பட்டியை பகுதியை சேர்ந்த 13 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 22 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால் காரிமங்கலம் காவல்நிலையத்தில் மகளை காணவில்லை என்று  புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதேபகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர் டில்லிராஜா என்பவர் திருமணம் செய்யும் நோக்கத்துடன் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் டில்லிராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். 

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்வதும், பின்னர் இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.