60 ரூபாய்க்காக அரங்கேறிய கொடூர கொலை - ஜெயிலில் கம்பி எண்ணும் 13 வயது சிறுவன்
உத்திர பிரதேசத்தில் 60 ரூபாய்க்காக வாலிபரை அடித்தே கொலை செய்த 13 வயது சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
உத்திரபிரதேசத்தில் உள்ள ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த சிறுவனுக்கு 18 வயதில் சுப்பி என்று ஒரு நண்பர் இருந்தார்.
சுப்பியிடம் இந்த சிறுவன் சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி 60 ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு, அந்த சிறுவன் 60 ரூபாயை திருப்பி தரமுடியாமல் தவித்து வந்துள்ளார்.
இதை உணராத சுப்பி சிறுவனிடம் காசை கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், சுப்பியை காட்டுக்குள் அழைத்து சென்று அடித்தே கொடூரமாக கொலை செய்துள்ளார்.
பின்னர் அந்த சடலத்தை அங்கேயே புதரில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளார். தகவல் அறிந்த போலீசார் கொலை செய்த 2 நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.அங்கு சுப்பியின் உடல் விலங்குகளால் சிதைக்கப்பட்டு பாகங்களாக கிடந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த பாகங்களை கைப்பற்றிய போலீசார், சிறுவனை கைது செய்து சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.