கொரோனா நிவாரணமாக 13 வகையான பொருட்கள் வழங்கத்திட்டம்

corona products
By Irumporai May 13, 2021 02:19 PM GMT
Report

தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக 13 வகையான பொருட்கள் வழங்கத்திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.

தற்போது,தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதில் முக்கியமான இன்று ஆக்ஸியன் உற்பத்திக்கு அரசு சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.

எனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜூன் 3 ஆம் தேதி முதல் மக்களுக்கு நிவாரணமாக 13 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கத்திட்டமிட்டுள்ளதாகத் தற்போது, தகவல்கள் வெளியாகிறது.

இதில், கோதுமை, உப்பு, ரவை,பருப்பு, உள்ளிட்ட 13 வகையான மளிகைப் பொருட்கள் இடம்பெற்றிருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.