அயோடின் இல்லாத 13 டன் உப்புகள் பறிமுதல் - அதிரடி ரெய்டில் சிக்கிய வியாபாரிகள்
சென்னை கோயம்பேட்டில் உள்ள அங்காடியில் உப்பின் தரம் குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அதிகாரிகள் அதிரடி ரெய்டு
சென்னை கோயம்பேடு அங்காடியில் உள்ள குடோனில் உப்பு விற்பனை குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குடோனில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அயோடின் இல்லாத உப்புக்கள் உணவு அங்காடியில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் வியாபாரியிடம் விசாரித்த போது உப்புகள் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக அனுப்பப்படுவதாக தெரிவித்தார். அதற்கு அதிகாரிகள் பில் கேட்கவே பதட்டமான வியாபாரி மலுப்பலாக பதில் அளித்தார்.
இதனால் 13 டன் அயோடின் இல்லா உப்புகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த திடீர் சோதனை குறித்து பேசிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்,
அயோடின் உப்பு இல்லாமல் சாப்பிடக் கூடாது. அயோடின் இல்லாமல் உப்பு பயன்படுத்தினால் கர்ப்பிணி பெண்களுக்கு ஆபாஷன் ஏற்படும் என்றும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி இல்லாமல் போயிடும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு உப்பில் கட்டாயம் அயோடின் இருக்க வேண்டும் என்றும் அயோடின் இல்லாமல் உப்பு விற்பனை செய்யப்படும் உப்புகளுக்கு தடை விதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வியாபாரிகள் விற்பனைகாக வைக்கப்பட்டுள்ள உப்பு மூட்டைகளில் எந்த லேபிள்களும் இல்லை என்ற அவர், உப்பின் தரம் குறித்து அறிய சோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவித்தார்.