சிறப்பு முகாமில் 13 இலங்கைத் தமிழர்கள் மரத்திலும், மதில் சுவற்றிலும் ஏறி போராட்டம்

Sri Lanka Refugees Sri Lanka Tamil Nadu Police Tiruchirappalli
By Thahir Sep 10, 2022 08:50 AM GMT
Report

திருச்சி மத்திய சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 116 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

செல்போன்கள் பறிமுதல்

இதனிடையே சிறப்பு முகாமில் போதைபொருள் கடத்தல் மற்றும் தங்கம் கடத்தல் வழக்குகள் தொடர்புடையதாக என்ஐஏ அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 19ம் தேதியன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பில் சிறப்பு முகாமில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பால் சிறையில் இருந்தபடியே குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக எழுந்த புகாரையடுத்து சோதனை நடத்தியதில் 154 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை தங்களிடம் மீண்டும் ஒப்படைக்க வலியுறுத்தி மறுதினம் போராட்டம் நடத்திய நிலையில்,

இலங்கை தமிழர்கள் போராட்டம்

நேற்றைய தினம் இரவு 13 இலங்கை தமிழர்கள் சிறப்பு முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் மற்றும் வளாக மதில் சுவர்மீது ஏறி நின்று பறிமுதல் செய்த செல்போன்களை திரும்பி வழங்க வேண்டும்,

சிறப்பு முகாமில் 13 இலங்கைத் தமிழர்கள் மரத்திலும், மதில் சுவற்றிலும் ஏறி போராட்டம் | 13 Sri Lankan Tamils Protest Trichy Special Camp

விரைவில் விடுதலையாகப் போகும் செய்தியை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும், எங்களது குடும்பத்தினருடன் பேச அனுமதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறப்பு முகாமில் 13 இலங்கைத் தமிழர்கள் மரத்திலும், மதில் சுவற்றிலும் ஏறி போராட்டம் | 13 Sri Lankan Tamils Protest Trichy Special Camp

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் காவல்துறையிர் ஈடுபட்டநிலையில் இதனை செய்தி எடுக்கச் சென்ற பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினரை செய்தி எடுத்தாலும், அவர்கள் கூறியதை பதிவு செய்து வெளியிட்டாலும் தங்கள் மீது தனி நபர் வழக்கு பதிவு செய்வேன் என காவல் ஆய்வாளர் நிக்சன் மிரட்டல் விடுத்ததை அடுத்து, பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையினர் அங்கு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.