உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு எச்சரிக்கை விடுத்த ரஷ்ய போர் கப்பல் - வைரலாகும் ஆடியோ

Russia ukrain Russianwarship Ukrainiansoldiers
By Petchi Avudaiappan Feb 25, 2022 08:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ரஷ்ய போர் கப்பல் கேப்டனை கெட்டவார்த்தையால் திட்டிய உக்ரைன் வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன், தற்போது நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. இதனால் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என கூறி ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது.

தொடர்ந்து 3வது நாளாக  தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து கைப்பற்றினர். இந்த தாக்குதலில் இருஅணி தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது. 

இதனிடையே உக்ரைனின் கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரஷ்ய போர் கப்பல் ஒன்று உக்ரைன் வீரர்களை சரணடையுமாறு கூறியது.

ஆனால் ரஷ்ய போர் கப்பல் மற்றும் அதன் படை வீரர்களின் தளபதியை கெட்ட வார்த்தையில் திட்டி உக்ரைன் தளபதி  சரணடைய மறுத்தார். இதனால் தீவில் இருந்த உக்ரைன் பாதுகாப்பு படையினர் மீது ரஷ்ய போர் கப்பல் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 13 பேரும் வீர மரணமடைந்தனர்.