Friday, Jul 25, 2025

இந்தியாவில் 13 லட்சம் பெண்கள், சிறுமிகள் மாயம் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Delhi Odisha
By Thahir 2 years ago
Report

கடந்த 3 ஆண்டுகளில் 13 லட்சம் பெண்கள் சிறுமிகள் இந்தியாவில் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

13 லட்சம் பெண்கள் சிறுமிகள் மாயம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் பல்வேறு எழுத்துபூர்வமான கேள்விகளுக்கு அந்ததந்த துறை மத்திய அமைச்சகம் பதில் அளித்து வருகிறது.

அதன் படி, இந்தியாவில் காணாமல் போன பெண்கள் சிறுமிகள் பற்றிய தகவல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

13 lakh women and girls are missing in India

அதன்படி, கடந்த 2019 முதல் 2022 வரையில் இந்தியாவில் மொத்தமாக 13.13 லட்சம் பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர் என தேசிய குற்ற ஆவண அறிக்கைபடி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 10.60 லட்சம் பெண்கள் என்றும், 5.51 லட்சம் வரையில் சிறுமிகள் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியிடப்படப்பட்டுள்ளன.

முதல் இடத்தில் மத்திய பிரதேசம் 

இந்த காணாமல் போன பெண்கள் எண்ணிக்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போனதாக மத்திய பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் உள்ள மேற்கு வங்க மாநிலத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். அடுத்து ஒடிசாவில் 1 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள், சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.

டெல்லியில் 61 ஆயிரம் பெண்கள் – சிறுமிகளும், ஜம்மு காஷ்மீரில் 57 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சிறுமிகளும் காணாமல் போயுள்ளனர்.

தமிழகத்தில் 2019 – 2022 காலகட்டத்தில் 57,918 பெண்கள் , சிறுமிகள் காணாமல் போயுள்ளனர். 2019-2020இல் 19,658 பேரும், 2020-2021இல் 18,298 பெண்கள் சிறுமிகளும், 2021-2022இல் 23,964 பெண்கள் சிறுமிகளும் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.