13 மாவட்டஙகளில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப் போகும் மழை...!

Chennai Department of Meteorology Climate Change
By Thahir Jun 26, 2023 02:51 AM GMT
Report

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை 

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இன்று (ஜுன் 26) முதல் 29 ஆம் தேதி வரை ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

13 districts will receive rain in the next 3 hours

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருப்பத்துார், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோட்டில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.