ரயிலில் இருந்து இறங்கியவர்கள் மீது வேறு ரயில் மோதி கோர விபத்து - 13 பேர் பலி!
ஒரு ரயிலில் இருந்து இறங்கியவர்கள் மீது மற்றொரு ரயில் மோதி 13 பேர் உயிரிழந்தனர்.
ரயில் மோதி விபத்து
மகாராஷ்டிரா, ஜால்கான் பகுதியில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயிலில் எச்சரிக்கை அலாரம் அடித்ததால், பயத்தில் பயணிகள் இறங்கினர். அப்போது அவர்கள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
13 பேர் பலி
தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் நிவாரண தொகையை மாநில அரசு அறிவித்துள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ஒன்றரை லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.பி. மகேஷ்வர் ரெட்டி கூறுகையில், காயமடைந்தவர்கள் ஜல்கான் சிவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ரெயில்வே அறிக்கை சமர்ப்பித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.