பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தைக்கு Passport

By Fathima Sep 10, 2026 10:45 AM GMT
Report

இந்தியாவில் பிறந்து 13 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாஸ்போர்ட் பெறப்பட்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரை சேர்ந்தவர் ஆஷிஷ், இவரது மனைவி கீதாமாதுரி.

லண்டனில் வசித்து வருகின்றனர், இவர்களுக்கு கடந்த மே மாதம் 30ம் தேதி பெண் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த மறுநாளில் அகஸ்யா பிரின்ஸ் என பெயர் சூட்டினர்.

பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தைக்கு Passport | 13 Day Old Baby Get Passport

தொடர்ந்து ஜூன் 4ம் தேதி ஆதார் கார்டு பெறுவதற்கும், 6ம் தேதி பாஸ்போர்ட் பெறுவதற்கும் விண்ணப்பிக்கப்பட்டது.

தற்போது பாஸ்போர்ட் வழங்கப்பட்டு பிறந்த 13 நாட்களில் பெற்றதால் சர்வதேச சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.

பிறந்து 13 நாட்கள் ஆன குழந்தைக்கு Passport | 13 Day Old Baby Get Passport