விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி - வெளியான அதிரடி அறிவிப்புகள்

Puducherry
By Sumathi Aug 30, 2022 10:13 AM GMT
Report

புதுச்சேரியில் ரூ.13.80 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

 முதலமைச்சர் ரங்கசாமி 

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று காலை தொடங்கியது. சட்டமன்றத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின் முடிவில் முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்தார்.

விவசாயிகள் கடன் ரூ.13.8 கோடி தள்ளுபடி - வெளியான அதிரடி அறிவிப்புகள் | 13 8 Crore Waiver Of Puduwai Farmers Cm Rangaswamy

அதில், புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. இடம் தேர்வில் இன்னும் இறுதியாகவில்லை. விரைவில் புதிய சட்டமன்றம் கட்டும் பணி துவங்கும் என்றார். 2022 ம் ஆண்டு விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் 13.8 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

 கடன் தள்ளுபடி

கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியார் பங்களிப்புடன் அரசு விரைவில் துவங்கும் என அறிவித்த முதல்வர், நலிவடைந்த கூட்டுறவு நிறுவங்களை மேம்படுத்த 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் பாண்டெக்ஸ், பாண்பேப் நிறுவனங்கள் மூலம் மீண்டும் அரசின் இலவச துணி வகைகள் வழங்கப்படும். விழாக்காலம் துணி மற்றும் மாணவர்களுக்கான சீருடைகள் அரசு நிறுவனம் மூலம் வழங்கப்படும்.

 உதவித்தொகை  உயர்வு

மூடப்பட்டுள்ள அரசின் 3 மில்களை இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு செயல்படுத்தப்படும் என்றும், அரசு கலந்தாய்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு முதுகலை பட்டப்படிற்கும் அரசு நிதி வழங்கும் எனவும் ரங்கசாமி உறுதியளித்தார்.

கடற்கரை சாலையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரெஞ்சு பாரம்பரியமிக்க நகராட்சி கட்டிடம் விரைவில் திறக்கப்படும். 70 முதல் 80 வயதுள்ள முதியோருக்கு உதவித்தொகை 2500 ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதல்வர் ரங்கசாமி,

மருத்துவக் காப்பீடு திட்டம்

துப்புரவு பணியாளர்கள் இனிமேல் தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்றார். மேலும் மீனவர்களுக்கு டீசல் மானியம் லிட்டருக்கு ரூ.12ஆக வழங்கப்படும் என்றும், மீனவர்களுக்கு வேறு என்ன தேவையே அது செய்யப்படும் என தெரிவித்தார்.

வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மரபணு குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் எனவும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.