சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ ஓட்டுநர்! என்ன நடந்தது?
ஆண்டிப்பட்டி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியும், அனுப்பப்பட்டியை சேர்ந்த அருண்குமார் என்ற 23 வயது ஆட்டோ ஓட்டும் வாலிபரும் கடந்த ஓராண்டிற்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பல முறையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.
இதனால் சிறுமி தற்போது 2 மாத கர்ப்பம் தரித்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இளைஞர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.