12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை

Tamil nadu
By Irumporai May 08, 2023 07:00 AM GMT
Report

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி 600 க்கு 600 பெற்று சாதனை படைத்துள்ளார்.

+2 தேர்வு முடிவுகள்  

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில்திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தினி என்ற மாணவி அணைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.அரசு உதவிப்பெறும் பள்ளியே சேர்ந்த இந்த மாணவி தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம் , வணிகம், கண்க்குபதிவியல் , கணினிபயன்பாடு என் அணைத்து பிரிவிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் : 600 க்கு 600 மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை | 12Th General Exam Results

600 க்கு 600 மதிபெண்கள்  

இந்த மதிப்பெண்கள் குறித்து பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த மாணவி நந்தினி : இந்த மதிப்பெண்கள் எடுத்தது மகிழ்ச்சியினைஅளிப்பதாக கூறிய நந்தினி இந்த வெற்றிக்கு காரணம் எனது பள்ளியும் எனது ஆசிரியர்களும் தான் காரணம் எனக் கூறிய அவர் , எனது பள்ளி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் அரசு உதவி பெறும் பள்ளி எனக்கு உறுதுணையாக இருந்த அணைவருக்கும் நன்றி எனக் கூறிய மாணவி நந்தினி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என கூறினார்.