12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மாணவ, மாணவிகளில் அதிகம் தேர்ச்சி பெற்றது யார்?
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
பொதுத்தேர்வு முடிவுகள்
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுள் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்வினை 8.17 லட்சம் மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மாணவ, மாணவியர்கள் தங்கள் தேர்வு முடிவினை tnresults.nic.in , dge.tn.nic.in , என்ற இணைய தளங்களில் தெரிந்துகொள்ளலாம்.
முதல் மூன்று இடங்கள்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாணவியர்கள் 4,05,753 (96.38%) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகள் 4.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறை பிளஸ் டூ பொதுத்தேர்வில் விருதுநகர், திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது.
தேர்ச்சி பெற்றவர்கள் : 7,55,451 (94.03%)
மாணவிகள் : 96.38%
மாணவர்கள் : 91.45%
சிறைவாசிகள் : 79 பேர்
மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி
தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100% பேர் தேர்ச்சி.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் 89.20% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடம் சதவிகிதம் இயற்பியல் 97.76
வேதியியல் 98.31
உயிரியல் 98.47
கணிதம் 98.88
விலங்கியல்97.76
வணிகவியல் 96.41