வெளியானது 12-ஆம் வகுப்பு ரிசல்ட் - அனைவரும் 100% தேர்ச்சி!!

release result exam 12th
By Anupriyamkumaresan Jul 19, 2021 04:54 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

தமிழகத்தில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது

தமிழகம் உட்பட நாடு முழுவதும், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.

மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து தனி குழு அமைக்கப்பட்டு மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

வெளியானது 12-ஆம் வகுப்பு ரிசல்ட் - அனைவரும் 100% தேர்ச்சி!! | 12Th Exam Result Today Release

அதன் படி சற்று நேரத்தில், 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை, www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in , www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.