12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு தேதி மாற்றம் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தன. இதற்கான தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மே மாதம் 7
தமிழ்நாட்டு மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பிற்குச் சேருவதற்கான நீட் தேர்வு மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் கவனம் செலுத்தி வெற்றி பெற ஏதுவாக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றியமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் கலந்துரையாடிய பின் தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.