12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்தப்படும்? - முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை..!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல நாட்களாக பள்ளி, கல்லூரிகள் அனைத்து மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு நடத்தப்படுமா என பல மாணவர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும் மாணவர்கள் படிப்பதற்காக கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடத்தலாம் என முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.