தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா? முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை..!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை மேற்கொண்டதில், சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும். என்றும், அதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும். என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாணவர்களில் நலனே முக்கியம் என சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் ரத்து செய்யப்படுமா என பலரது கேள்வியாக எழுந்துள்ளது.
இது குறித்து தற்போது முதலமைச்சர், கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இதனை தொடர்ந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார்.