சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு..!
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும். என்றும், அதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும். என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகும். என்றும், அதை பொருத்தே தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பாகவே பாடப்புத்தகம் விநியோகம் செய்வது தொடர்பாக ஓரிரு தினங்களில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.