12ம் வகுப்பு தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

minister 12thexam schooleducation
By Irumporai May 10, 2021 11:34 AM GMT
Report

சென்னை தலைமை செயலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மாணவர்களின்உடல் நலன் முக்கியம் என்பதால் மிக நிதானமாக முடிவெடுத்து வருவதாக கூறினார்.

  என்ன தான் மிக பாதுகாப்போடு தேர்வை நடத்தினாலும் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிக கவனத்துடன் முடிவு எடுக்க உள்ளோம் என்று கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

12ம் வகுப்பு தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம் | 12Th Class Exam F The Minister Of School Education

  விரைவில் மாணவர்களின் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறினார். முன்பு நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்குவதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும், நகரப் பகுதிகளில் இருக்கும் ஆசிரியர்கள் ஊரகப் பகுதிகளிலிருக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பது குறித்தும் பள்ளி கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் அக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தியதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.