ஜூன் மாதம் செலுத்த 12 கோடி தடுப்பூசிகள் தயார்...மத்திய சுகாதாரத்துறை தகவல்...
தேசிய தடுப்பூசி முகாம் மூலமாக வரும் ஜூன் மாதத்தில் செலுத்த 12 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயார் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பரவி வரும் கொரோனா 2வது ஆடையை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் மத்திய அரசு நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
தற்சமயம் கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக்-வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஜூன் மாதத்தில் செலுத்த 12 கோடி கொரோனா தடுப்பூசிகள் தயாராக உள்ளதாகவும்,டிசம்பர் மாதத்திற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.