இளைஞரை ஆகாயத்திற்கு தூக்கிச்சென்ற பட்டம் - அதிர்ச்சி வீடியோ

kite 120feet 12minitssky
By Irumporai Dec 22, 2021 08:28 AM GMT
Report

காற்றில் பட்டத்தை பறக்க விடுவது என்பதே ஒரு தனி கலைதான். ஆனால் ஒரு இளைஞரை 120 அடி உயரத்திற்கு ஆகாயத்தில் தூக்கிச் சென்று 12 நிமிடங்கள் அந்தரத்திலேயே வைத்திருந்து இருக்கிறது ஒரு பட்டம் . அந்தரத்தில் உயிருக்கு போராடிய அந்த இளைஞர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தரையிறங்கி இருக்கிறார்.

அந்த அதிர்ச்சி வீடியோ இதயங்களில் வைரலாகி வருகிறது. இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புலோலி பகுதியைச் சேர்ந்தவர் நடராசா மனோகரன். இருபத்தி ஏழு வயதாகும் இந்த இளைஞர் வடமராட்சியில் உள்ள மந்திகை பகுதியில் தனது நண்பர்களுடன் பட்டம் விட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

விதவிதமான பட்டங்களை விட்டு மகிழ்ந்தவர்கள் ராட்சச பட்டம் ஒன்றை பறக்க விட்டிருக்கிறார்கள். அப்போது பட்டத்தை பிடித்துக்கொண்டிருந்த இளைஞரை தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறார்.

10 அடி உயரத்திற்கு 20 அடி உயரத்திற்கு அல்ல.சுமார் 120 அடி உயரத்திற்கு மேல் ஆகாயத்தில் தூக்கிச் செல்லப்பட்டிருக்கிறது. .அந்தரத்தில் தத்தளித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்திருக்கிறார் அந்த இளைஞர். தன்னை காப்பாற்ற சொல்லிக் குரல் கொடுத்துக்கொண்டே கையை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்திக்கிறார்.

ஒருவேளை அவர் கையை விட்டு இருந்தால் அவ்வளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்திருந்தால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். நண்பர்கள் கையை விட்டு விடாதே கையை விட்டு விடாதே நாங்கள் இருக்கிறோம் என்று அவருக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டே பட்டத்தை கீழே இழுக்க முயற்சித்து இருக்கிறார்கள்.

ஆனால் காற்றில் பறந்து கொண்டே இருக்க கீழே இறங்கவில்லை . பின்னர் நடராசா தன் உடலை ஆட்டி ஆட்டி கீழே இறக்கி, தனது உடலை வளைத்து வளைத்து கீழே இறக்க 20 அடி உயரத்திற்கு கீழே வந்து இருக்கிறது. அப்போது கையை விடச் சொல்லி நண்பர்கள் சத்தம் போடவும் கையை விடவும் கீழே மணலில் விழுந்து கிடந்த அவரை நண்பர்கள் ஓடி வந்து தூக்கி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.

ஆந்தரத்தில் மேலே போனபோது உயிர் போய்விட்டது என்றே நினைத்தேன். இதிலிருந்து தப்பிக்க முடியாது என்றுதான் நினைத்தேன். நான் கடைசி வரைக்கும் கீழே பார்க்கவே இல்லை.

கீழே உற்றுப் பார்த்து இருந்தால் இவ்வளவு உயரத்தில் பறக்கிறோமா என்று நினைத்து அந்த பயத்திலேயே கையைவிட்டு உயிரை இழந்து இருப்பேன். என்னுடன் இருந்தவர்கள் கொடுத்த நம்பிக்கையாலும் அவர்கள் தந்த தைரியத்தால் உயிர் பிழைத்து இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் நடராசன் மனோகரன்.