கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : திருத்தணியில் பரபரப்பு

Tamil nadu Sexual harassment
By Irumporai Oct 10, 2022 03:14 AM GMT
Report

திருத்தணி அருகே காணாமல் போன ஆட்டுக் குட்டியைத் தேடிச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டை அருகே தாமனேரி கிராமம் ரங்கா புரத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த 2ம் தேதி காணாமல் போன தனது ஆட்டுக்குட்டியை தேடி தாமனேரி மலைப்பகுதிக்கு சென்றுள்ளார்.

கத்தியை காட்டி மிரட்டி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : திருத்தணியில் பரபரப்பு | 12 Years Old Girl Raped In Tiruttani

அப்போது ஆதி வராதபுரம் காலனி பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் பஞ்சாட்சரம் கத்தியை காட்டி மிரட்டி அந்த 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.  

சிறுமிக்கு பாலியல் தொல்லை

இது குறித்து சிறுமியின் பெற்றோர் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பஞ்சாட்சரத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.