5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன் - அதிர்ச்சியில் உறைந்த மக்கள்
5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம், குன்ட்டி மாவட்டத்தை சேர்ந்த 5 வயது சிறுமி குளிர்பானம் வாங்க அருகேயுள்ள கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தனிமையில் இருந்த 12 வயது சிறுவன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இந்த சம்பவம் தொடர்பாக டோர்பா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசார் சிறுவனிடம் நடத்திய விசாரணையில் சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் அமன் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவன் ராஞ்சி பகுதியில் உள்ள சிறார் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.