திட்டிய பெற்றோர்.. வீட்டை விட்டு வெளியேறிய 12 வயது சிறுமி -கடைசியில் நேர்ந்த கொடூரம்!
12-வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
12-வயது சிறுமி
மராட்டிய மாநிலம் மும்பை ஜோகேஸ்வரி கிழக்குப் பகுதியில் 12 வயது சிறுமி, ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால் கோவத்தில் அந்த சிறுமி விட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அப்போது ரயில் நிலையம் நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத மர்ப நபர் ஒருவர் அழைத்துப் பேசியுள்ளார். மேலும் அங்கிருந்து அழைத்துச் சென்று 12 வயது சிறுமியை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் சிறுமியை வாகனத்தில் அழைத்து வந்து தாதர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி சாலையில் அழுதபடி சுற்றித் திரிந்துள்ளார். அப்போது சந்தேகம் அடைந்த ரயிவே காவல் துறையினர் அந்த சிறுமியை அழைத்து விசாரித்துள்ளனர்.
வன்கொடுமை
அப்போது 5 பேர் கும்பலால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.ரயில்நிலையம் அருகே பதுங்கி இருந்த 5 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.