மறையாத மூடநம்பிக்கை : இறந்த சிறுவனை 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த கொடூரம்
கர்நாடக மாநிலத்தில் தன்ணீரில் மூழ்கிய சிறுவன் உயிர் பிழைக்கவைக்க 8 மணி நேரம் உப்பு குவியலில் வைத்த கொடூர சம்பவம் அரேங்கேறியுள்ளது.
விலகாத மூட நம்பிக்கை
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் மூட நம்பிக்கை என்ற கொடும் தொற்று இன்னும் அகலவில்லை அதற்கு உதாரணமாக கர்நாடகமாநிலத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சிரவாரா கிராமத்தை சேர்ந்தவர் சேகர்.
இவரது மனைவி கங்கம்மா. இவர்களுக்கு சுரேஷ் சிரவர் என்ற 12 வயது மகன் உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டு இருந்த பாஸ்கர், எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் தண்ணீர் தேங்கி இருந்த குழியில் விழுந்து உயிரிழந்தான் .
உப்பு குவியலில் சிறுவன் பிணம்
பிணமாக தனது மகனை மீட்ட பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர் அபோது முகநூலில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் மீது உப்பு குவியலை கொட்டினால் 2 மணி நேரத்தில் உயிர் பிழைத்து விடுவார்கள் என்று ஒரு பதிவை படித்தது சேகருக்கு நினைவுக்கு வந்தது.
இதனால் உயிரிழந்தசுரேஷ் சிரவர் உடல் மீது உப்பு குவியலை போட்டார். ஆனால் 8 மணி நேரம் ஆகியும் பாஸ்கர் உயிர் பிழைக்கவில்லை. இதன்பின்னர் பாஸ்கரின் உடல் உப்பு குவியலில் இருந்து எடுக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. பாஸ்கர் உடல் மீது உப்பு குவியல் கொட்டி வைத்திருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது .
வெறும் கதையாக இருந்த மூட நம்பிக்கை தற்போது இணையத்திலும் சில தவறான தகவலாக பரவி உள்ளது எனபதற்கு இந்த சம்பவம் உதாரணமாக உள்ளது.