தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் - அரசு உத்தரவு!

Tamil nadu Government of Tamil Nadu
By Vinothini Jun 19, 2023 02:12 PM GMT
Report

 தமிழ்நாட்டின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிடை மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பணியிடை மாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், பீலா ராஜேஷ் - எரிசக்தி துறை முதன்மை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரமேஷ் சந்த் மீனா - சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராகவும்,

12-tamilnadu-ias-officers-transfered

திருவண்ணாமலை கூடுதல் ஆட்சியர் வீர் பிரதாப் சிங், வணிவரித்துறை இணை ஆணையராகவும், பட்டு வளர்ச்சி துறை இயக்குநர் விஜய ராணி, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசு உத்தரவு

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநர் ஆயிஷா மரியம், சிறுபான்மையில் நலத்துறை ஆணையராகவும், ஊரக வளர்ச்சி துறை இணைச் செயலாளர் சந்திர சேகர் சாமூரி, பட்டு வளர்ச்சி துறை இயக்குனராகவும்,

12-tamilnadu-ias-officers-transfered

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் விஜய குமார், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன தலைவராகவும், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத் தலைவர் ஸ்வர்ணா, தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவன தலைவராகவும்,

நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் கண்ணன், தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.