‘’ என்று தணியும் இந்த சோகம் ‘’ - மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

srilanka rameswaram indianfisherman
By Irumporai Feb 13, 2022 03:25 AM GMT
Report

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக மீனவர்கள்,இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து தொடர் கதையாகியுள்ளது. இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கல் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

தமிழக  மீனவர்கள் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தப்போது இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு மீனவர்களின் 2 படகுகளும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘’ என்று தணியும் இந்த சோகம் ‘’ - மீண்டும் தமிழக மீனவர்களை  கைது செய்தது இலங்கை கடற்படை | 12 Rameswaram Fishermen Arrested

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2014 முதல் 2018ஆம் ஆண்டு வரை பல்வேறு பகுதிகளில் இருந்து சென்ற மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 125 மீன்பிடி படகுகளும், 17 நாட்டுப் படகுகளும் இலங்கை அரசால் ஏலம் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழக மீனவ்ர்களுக்கு இலங்கை கடற்படை தொந்தரவு கொடுத்து வருவது தமிழக மீனவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.