வியாழனின் 12 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு.. - ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி... - வெளியான தகவல்..!

NASA World
By Nandhini Feb 03, 2023 09:13 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

வியாழனின் 12 புதிய நிலவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததுள்ளனர்.

வியாழனின் 12 புதிய நிலவுகள் கண்டுபிடிப்பு

வியாழனின் 12 புதிய நிலவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வியாழன் தற்போது சனிக்கோளை விட அதிக நிலவுகளைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தியில், 

சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனைச் சுற்றி ஒரு டஜன் புதிய செயற்கைக்கோள்கள் அல்லது நிலவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வியாழன் இப்போது 92 செயற்கைக்கோள்களை சுற்றி வருகிறது.

வியாழனின் 12 புதிய செயற்கைக்கோள்களை வாஷிங்டனில் உள்ள கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஸ்காட் ஷெப்பர்ட் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

நாசாவின் யூரோபா கிளிப்பர் மிஷன் பூமிக்கு அப்பால் உள்ள கடல் உலகத்தைப் பற்றிய முதல் அர்ப்பணிப்பு மற்றும் விரிவான ஆய்வை நடத்த தயாராகி வருகிறது. வியாழனின் இந்த தொலைதூர நிலவில் வாழ்க்கைக்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளதா என்பதை நாசா ஆய்வு தீர்மானிக்கும். 

12-new-moons-jupiter-discovered-nasa