சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா நிறுத்திவைப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
12 மணி நேர வேலை சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவி்த்துள்ளார்.
12மணிநேரவேலை
தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது.அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்யலாம். வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை என்ற மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

சட்டத் திருத்தம் நிறுத்தி வைப்பு
இதற்கு தோழமைகள் கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பினை தெரிவித்த நிலையில் 12 மணிநேர சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.