12 மணி நேர வேலை மசோதாவை கைவிடும் தமிழக அரசு? முக்கிய ஆலோசனை
12 மணிநேர வேலை மசோதா தொடர்பாக, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.
12 மணி நேரம்
ஒருநாளில் 12 மணி நேரம் வரை தொழிலாளர்கள் பணியாற்றலாம் என தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் கூட்டணி கட்சிகளே சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தன.மேலும், மசோதாவை திரும்பப்பெறவும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆலோசனை
இந்நிலையில், முக்கிய தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் மாலை 3 மணிக்கு நடைபெறும்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிகின்றனர்.