12 முக்கிய மத்திய அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு...!
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் 12 முக்கிய அமைச்சர்கள் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில் 43 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல் இன்று வெளியானது.
இதனால் இதுவரை பதவி வகித்து வந்த சதானந்த கவுடா, ரவிசங்கர் பிரசாத், தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ்வர்தன், பிரகாஷ் ஜவடேகர், சந்தோஷ் குமார் கங்கவார், பாபுல் சுப்ரியோ, தாத்ரே சஞ்சய் சம்ராவோ, ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திரா சரங்கி, தேபஸ்ரீ சவுத்ரி ஆகிய 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இவர்களது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டுள்ளார்.