11ம் வகுப்பு பொத்தேர்வுகள் இன்று தொடக்கம்
By Irumporai
தமிழகம் முழுவதும் நேற்று 12ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கிய நிலையில், இன்று 11ம் வகுப்பு பொத்தேர்வு நடைபெறவுள்ளது.
11ம் வகுப்பு பொத்தேர்வு
தமிழ்நாடு, புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. மாநிலம் முழுவதும் 3,225 மையங்கள் அமைக்கப்பட்டு, அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில், இன்று 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இன்று தொடங்கும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் 05ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று நடைபெறவுள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7.88 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.