ஞாபக மறதியால் 11ஆம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

schoolstudentsuicide gopichettipalayam
3 மாதங்கள் முன்

கோபிசெட்டிபாளையம் அருகே ஞாபக மறதியால் மனம் உடைந்து இருந்ததாக கூறப்படும் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள டி.என்.பாளையம் குமரன் கோவில் வீதியை சேர்ந்த ரவி என்பவர் டாஸ்மாக்கில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், ஒரு மகனும் உள்ள நிலையில் மகள் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

இதனிடையே கடந்த ஜனவரி 3 ஆம் தேதி பள்ளி மாணவி வீட்டில் இருந்தபோது ஏதோ ஒரு மாத்திரையை சாப்பிட்டுள்ளார், இது குறித்து மாணவியின் தந்தை கேட்டபோது தன்னால் சரிவர படிக்க முடியவில்லை. ஞாபக மறதி அதிகம் இருப்பதால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறியபடி திடிரென வீட்டின் பின்புறம் ஓடிய மாணவி மண்ணெண்ணையை தன்மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனையடுத்து சூடு தாங்காமல் அலறித் துடித்த தன் மகளை அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் தள்ளி தீயை அணைத்த தந்தை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் டி.என்.பாளையம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். அதன்பின் கோபி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அச்சிறுமிக்கு உடல்நிலை மோசமானதை அடுத்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மரணம் அடைந்தது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.