11 ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து: அதிரடி அறிவிப்பு
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை நேற்று வெளியிட்டிருந்தது. அதில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் இதற்காக பள்ளியிலேயே தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், 11 ஆம் வகுப்புக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்வதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
மேலும் குறிப்பிட்ட பாடப் பிரிவிற்கு அதிகளவு விண்ணப்பங்கள் வந்தால் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா வழிகாட்டுதலின்படி ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து வகுப்புகளை தொடங்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.