11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்து தேர்ச்சி அளிப்பதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களை பள்ளிகளில் சேர்ப்பது குறித்த நெறிமுறையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை காட்டிலும் கூடுதலாக 10 முதல் 15 சதவிகிதம் வரை இடங்களை அதிகரித்து சேர்க்கையை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட பாடத்திற்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளி அளவில் தேர்வு வைத்து சேர்க்கை நடத்தலாம் எனவும், எந்த பிரிவுக்கு விண்ணப்பிக்கிறார்களோ அந்த பிரிவுடன் தொடர்புடைய பாடங்களில் இருந்தும், கீழ்நிலை வகுப்பு பாடங்களில் இருந்தும் கேள்விக்குறி வகை வினாக்களாக கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் இதே வழிகாட்டுதலின் படி பன்னிரண்டாம் வகுப்பு சேர்க்கையையும் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.