11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேரம் குறைப்பு

By Irumporai Apr 23, 2022 09:01 AM GMT
Report

11 மற்றும் 12 வகுப்புக்களுக்கான செய்முறை தேர்வுக்கான நேரத்தை குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் 28-ம் தேதி வரையும் ஏப்ரல் 28 முதல் மே 2-ம் தேதி வரை இரு கட்டமாக செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுகளில் உயிரியல், வேதியல், இயற்பியல் உள்ளிட்ட முதன்மை தேர்வுகளுக்கு செய்முறை தேர்வு 3 மணி நேரம் நடைபெற்றது

இந்த கல்வியாண்டில் செய்முறை தேர்வுக்கான நேரத்தை 3 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாக குறைத்து அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இந்த செய்முறை தேர்வுகள் 30 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அதில் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை பங்கேற்பார்கள்.

11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நேரம் குறைப்பு | 11Th 12Th Practical Exam Time Reduction

10 மதிப்பெண்கள் அகமதீப்பீடு வழங்கப்படுகின்றன. எனவே 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே மாணவர்கள் செய்முறை தேர்வு என்பதால் அதனை 2 மணி நேரமாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்த ஆண்டு 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நேரடி தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை முன்னதாக அறிவித்தது. அதன்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9ஆம் தேதியும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6ஆம் தேதியும் தொடங்குகிறது என்பது குறிப்பிடதக்கது.