மீண்டும் கைவிலங்கு..3ம் கட்டமாக நாடு கடத்தப்பட்டும் இந்தியர்கள் - நிலை என்ன?
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 112பேர் 3ம் கட்டமாக நாடு கடத்தப்படவுள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டவிரோதமாகக் குடியேறியதாகக் கூறி கொலம்பியா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை நாடு கடத்தி வருகிறார்.அதில் இந்தியாவும் அடங்கும்.
அதன்படி, கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அமெரிக்க ராணுவ விமானம் மூலம் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள 104 இந்தியர்களைத் திருப்பி அனுப்பினர்.அதில் பஞ்சாப், ஹரியானா,குஜராத்,மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம்,சண்டிகர் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
3ம் கட்டம்
இதற்கிடையே, 2-வது கட்டமாக மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்தியது. இவர்கள் நேற்று அமிர்தசரஸ் வந்தடைந்தனர். இந்நிலையில், 3வது கட்டமாக 112 இந்தியர்களை நாடு கடத்தியுள்ளது.
இவர்கள் இன்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.இவர்களில் 31 பேர் பஞ்சாப், 44 பேர் அரியானா, 33 பேர் குஜராத் , 2 பேர் உத்தரப் பிரதேசம், தலா ஒருவர் இமாச்சல் உத்தரகாண்ட் மாநிலத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தார்.