படு வேகமாக பூமியை நெருங்கும் சிறுகோள் - நாசா எச்சரிக்கை!
சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுகோள்
சூரிய குடும்பத்தை தாண்டி பால்வெளியில் எண்ணிலடங்கா சூரிய குடும்பங்கள் உள்ளன. பூமியைத் தாண்டி பல்வேறு கிரகங்களும், சிறுகோள்களும் சுற்றி வருகின்றன.
அந்த வகையில், ஒரு விமானத்தின் அளவுடன் 110 அடி விட்டமுள்ள சிறுகோள் ஒன்று பூமியை நெருங்கி வருகிறது. இதற்கு 2024 OJ2 என்று பெயரிடப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு சுமார் 37,510 கி.மீ. வேகத்தில் பயணித்துக் கொண்டுள்ளது. பூமியை சுமார் 71,60,000 கி.மீ. தூரத்தில் நெருங்குகிறது.
நாசா எச்சரிக்கை
ஆகஸ்ட் 1ஆம் தேதி இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமிக்கு அருகில் வந்து கடந்து சென்ற பிறகு, மூன்றாவதாக இந்த சிறுகோள் வருகிறது. நாசாவின் ஜெட் பிராபல்ஷன் ஆய்வகத்தின்படி, 2024 OE மற்றும் 2024 OO என அழைக்கப்படும் இரண்டு சிறுகோள்களும் எவ்வித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாமல் பாதுகாப்பாக கடந்து சென்று விட்டன என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த அளவு மற்றும் தூரத்தை கருத்தில் கொண்டு இது ஆபத்தானதாக இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. இவற்றின் அளவு மற்றும் சுற்றுவட்டப் பாதை ஆகியவற்றை நாசா மற்றும் பிற விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் ஆராய்ச்சி செய்து,
பூமிக்கு ஏற்படக் கூடிய அபாயத்தை மதிப்பிட்டு வருகின்றன.
தொடர்ந்து ஆய்வு செய்து வரும் நாசா தற்போது பூமியை நெருங்கி வரும் சிறுகோளை கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.