தாயின் இறுதி சடங்குக்காக கையேந்திய சிறுமி - நெஞ்சை உருக வைக்கும் நிகழ்வு

Telangana
By Karthikraja Aug 19, 2024 11:30 AM GMT
Report

தாயின் இறுதி சடங்கு செய்ய பணமில்லாத சிறுமி பொது மக்களிடம் பண உதவி கேட்டு கெஞ்சிய நிகழ்வு நடந்துள்ளது.

தாய் தற்கொலை

தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டதில் உள்ள பெல்தரோடா கிராமத்தை சேர்ந்த, 11 வயதான துர்கா நேற்று (18.08.2024) காலை தூங்கி எழுந்த பொழுது, அந்த பெண்ணின் தாய் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

telangana girl beg for mother funeral

இதை கண்ட சிறுமி அலறி துடித்தாள். அவரின் அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு வந்து போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - ஓராண்டாக நடந்த கொடூரம்

பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - ஓராண்டாக நடந்த கொடூரம்

பணம் கேட்டு கெஞ்சிய சிறுமி

நான்கு ஆண்டுகளுக்கு முன் சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ள நிலையில், சிறுமி தன் தாயுடன் வசித்து வந்துள்ளார். தற்போது தாயும் உயிரை மாய்த்து கொண்டுள்ள நிலையில், உறவினர்கள் யாரும் இல்லாத சிறுமி, இறுதி சடங்கு செய்ய பணமில்லாமல் தாயின் சடலத்தின் அருகே அழுது கொண்டே அமர்ந்துள்ளார். 

தரையில் துண்டை விரித்து இறுதி சடங்கு செய்ய பண உதவி செய்யுமாறு அங்கிருந்த மக்களிடம் கெஞ்சியுள்ளார். இந்த செயல் காண்போரை கண்கலங்க செய்தது. சிறுமியின் பரிதாப நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியபடி சிறிது சிறிதாக பண உதவி செய்தனர்.

பண உதவி

இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இதனைக் கண்ட தெலுங்கானா பாரத ராஷ்டிரிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் கட்சி நிர்வாகியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து இறுதி சடங்கு செய்ய அனைத்து உதவியும் செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஆதரவற்ற சிறுமிக்கு கலெக்டர் அபிலாஷ் அபினவ் காணொலி மூலம் ஆறுதல் கூறினார். 

மேலும் தகவலறிந்த அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட ரெட்டி பெற்றோரை இழந்த சிறுமிக்கு ஆறுதல் கூறினார். மேலும் குழந்தைக்கு அனைத்து வசதிகளையும் இலவசமாக செய்து தருவதாகவும், செலவுக்கு மாதாமாதம் பணம் அனுப்புவதாகவும், ஏதேனும் தேவை இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார். சிறுமியின் கல்விக்கு தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என எம்எல்ஏ ராமராவ் படேல் உறுதியளித்தார்.