தாய் கண் முன்னே 11 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த ரஷ்ய ராணுவத்தினர் - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இருதரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏராளமான மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
போரை கைவிடுமாறு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தும், பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில், உக்ரைன் பகுதியில் அதிக இழப்பை ஏற்படுத்த ரஷ்ய ராணுவம் திட்டமிட்டிருக்கிறது.
பெண்கள் மற்றும் சிறுமிகளை பலாத்காரம் செய்தும் அப்பாவி மக்களை கொன்று குவித்தும் நாசப்படுத்தி வருகின்றனர். உக்ரைனில் அதிகப்படியான மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த சடலங்கள் அனைத்தும் கைகள் கட்டப்பட்ட நிலையில், கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு, அருகில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்னொரு கொடுமை என்னவென்றால், இறந்து கிடக்கும் பிணங்களின் உடல்களை பிளந்து, வெடிகுண்டை நிரப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் உலக அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 11 வயது சிறுவனை 3 ரஷ்ய ராணுவத்தினர் தாய் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்தபோது, நாற்காலியில் தாயார் கட்டி வைக்கப்பட்டு இந்த கொடூரம் நடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புச்சா நகரில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த ரஷ்ய வீரர்கள் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
துணிகள், தொலைக்காட்சி பெட்டிகள், டேபிள்கள், ஸ்பீக்கர்கள் போன்ற பல பொருட்களை திருடிச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.

ஐந்து வருட விடுமுறையில் வெளிநாடு பறக்கும் அரச ஊழியர்கள் : அநுர அரசு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை IBC Tamil
