சூதாட்டத்தில் சிக்கிய 3 இந்திய வீரர்கள்?...அதிரடியாக நடவடிக்கை எடுத்த ICC..?
3 இந்திய வீரர்கள் உட்பட, 11 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில், ICC அவர்கள் மீது அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சூதாட்ட புகார்கள்
2021-ஆம் ஆண்டின் Emirates T10 league-இன் போது பல்வேறு ஊழல்களும், சூதாட்டங்களும் நடந்ததாக புகார்கள் பல தரப்பில் இருந்து புகார்கள் எழுந்தது. அந்த தொடரில் பங்கேற்று கொண்ட, Pune Devils அணியின் இணை உரிமையாளர் மற்றும் அந்த அணியின் வீரராக களமிறங்கிய வங்கதேச டெஸ்ட் வீரர் நஷீர் ஹோசைன் ஊழல் எதிர்ப்பு விதிமுறையை மீறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே போல, இந்த தொடரில் பங்கேற்ற இந்திய அணிகளின் உரிமையாளர்கள் பராக் சங்வி, கிரிஷன் குமார் மற்றும் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சன்னி தில்லான் உட்பட 8 வீரர்கள் மீது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் குற்றஞ்சாட்டியுள்ளது.
குற்றவாளியாக அறிவிப்பு
நடத்தப்பட்ட விசாரணையில், சங்வி மீது ஊழல் தடுப்பு சட்டம் 2.2.1 மற்றும் 2.4.6 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அதாவது சர்வதேச மற்றும் உள்நாட்டு போட்டிகளின் முடிவுகள் பற்றி பிக்சிங் செய்வது மற்றும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தவறியதற்காக போன்ற பிரிவுகளில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் கிரிஷன் குமார் ஊழல் தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளிக்காமல் இருந்த காரணத்திற்காக தடை செயப்பட்டுள்ளார். பங்களாதேஷ் அணியின் வீரர் நசீர் 750 அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்புள்ள பரிசை DACO விடம் தெரிவிக்கத் தவறியதற்காக" குற்றம் சாட்டப்பட்டார். அவர் பங்களாதேஷ் அணிக்காக 19 டெஸ்ட் மற்றும் 65 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.