மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் நிரப்பியபோது வாயு கசிந்து 22 பேர் உயிரிழப்பு

Corona Death Maharashtra Oxygen leak
By mohanelango Apr 21, 2021 09:13 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இரக்கம் இன்றி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அதே சமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவில் 2157521 நோயாளிகள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் மருத்துவமனை படுக்கைகள், ஆக்சிஜன் மற்றும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இந்நிலையில் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும் தட்டுப்பாடுகள் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

தற்போது மகாராஷ்டிராவில் நாசிக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பும்போது வாயு கசிந்ததால் 22 பேர் உயிரழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் மிகவும் துயரமானது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மகாராஷ்டிரா அமைச்சர் ராஜேந்திர சிங்கானே தெரிவித்துள்ளார்.