மிரட்டும் ஒமைக்ரான் .. தமிழகத்தில் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு- சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் புதிய வகை திரிபான 'ஒமைக்ரான்' நோய்த்தொற்று பரவல் இந்தியாவில் கடந்த சில தினங்களாக வேகமெடுக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவில் ஒமைக்ரான் நோய்த்தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், மத்தியக் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன
இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று உறுதியானவர்களில் 6 பேருக்கு சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒமைக்ரான் பாதித்தவர்களில் 7 பேர் சென்னையிலும், கன்னியாகுமரி, திருவண்னாமலை, திருவாரூரில் தலா ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதித்தவர்களில் 4 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.