இலவச பொருட்களை வாங்க வந்த மக்கள் மூச்சு திணறி பலி - தொடரும் சோக சம்பவம்

Pakistan
By Irumporai Apr 01, 2023 10:32 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பாகிஸ்தானில் நெருக்கடியில் சிக்கி பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.

 நெருக்கடியில் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வருகின்றது, இதனால் பொது மக்கள் தங்களுக்கு அடிப்படை தேவையான அரிசி, கோதுமை, உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இலவச பொருட்களை வாங்க வந்த மக்கள் மூச்சு திணறி பலி - தொடரும் சோக சம்பவம் | 11 Killed Several Injured In Stampede Pakistan

இந்த நிலையில் பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சி சிந்து தொழிற்பேட்டையில் பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பாக இலவச ரேஷன் பொருட்கள் கொடுக்கப்பட்டது. அந்த ரேஷன் பொருட்களை வாங்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

பொதுமக்கள் மரணம்

அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் ஆகியோர் மயக்க மடைந்தனர் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இலவச ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்