பண மோசடி வழக்கில் கைதான ராஜேந்திர பாலாஜியிடம் சுமார் 10 மணி நேரம் தொடர் விசாரணை

investigation aiadmk rajendrabalaji
By Irumporai Feb 13, 2022 06:17 AM GMT
Report

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 11 மணி நேரம் விசாரணை நடத்தினர்  

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜி சமீபத்தில் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து தமிழகம் அழைத்து வரப்பட்ட அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.  

 இந்த நிலையில், விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 7ஆம் தேதி மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணை சுமார் 11 மணி நேரம் நீடித்தது. பண பரிவர்த்தனை விவரங்கள், புகார் விவரங்கள் அடிப்படையில் டிஎஸ்பி கண்ணன் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.  

சுமார் 11மணிநேரம் நடந்த விசாரணையில் ராஜேந்திர பாலாஜியிடம்  100 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.