2 பேர் போய்ட்டாங்க - 11 அமைச்சர்கள் மீது வழக்குள்ளது...! எச்சரிக்கும் அண்ணாமலை
நேற்று திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையை தொடர்ந்தார்.
என் மண் என் மக்கள்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பாஜகவிற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக பாஜக தலைவைர் அண்ணாமலை , தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை மேற்கொண்டு வருகின்றார்.
நடைப்பயணத்தின் ஆங்காங்கே பொதுகூட்டமமும் நடத்தி மக்களிடம் 9 ஆண்டுகால பாஜக ஆட்சி குறித்தும் விவரித்து, மாநில ஆளும் கட்சியான திமுக மீது தொடர் விமர்சனங்களை வைத்து வருகின்றார்.
நேற்று, பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டையில் நடை பயணத்தை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து அய்யம்பேட்டை கடை வீதியில் பொதுமக்களிடையே பேசினார். இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெறக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்தார்.
11 பேர்..!
மூன்றாவது முறையாக மோடி மீண்டும் பிரதமராக வருவார் தமிழகத்தில் திமுக ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறிய அவர், தமிழக அமைச்சர்களின் 11 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளன என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இதுவரை இரண்டு அமைச்சர்கள் பதவியை இழந்து உள்ளார்கள் என்று இது தவிர வருவாய் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் மீதும் வழக்குகள் பாயும் என்று தெரிவித்து பொன்முடி மீது மேலும் ஒரு வழக்கு உள்ளது என்றும் கூறினார்.