அசானி புயல் எதிரொலி : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

By Swetha Subash May 10, 2022 01:01 PM GMT
Report

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளா ‘அசானி புயல்’ வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதால், இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு அசானி புயல் மிக அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும், இதனால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,திருவள்ளூர்,திருவண்ணாமலை,விழுப்புரம்,திருவாரூர்,வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,கிருஷ்ணகிரி,தருமபுரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அசானி புயல் எதிரொலி : தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | 11 Districts In Tamil Nadu To Expect Rain Asani

சென்னையைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “அசானி புயல் தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், காக்கிநாடவுக்கு தென்கிழக்கே சுமார் 260 கிமீ தொலைவிலும், மசிலிபட்டினம் பகுதிக்கு தெற்கே சுமார் 200 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கிமீ என்ற வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு ஆந்திர கடற்கரைக்கு மிக அருகில் வந்து பின்னர் வடகிழக்கு திசையில் நகர்ந்து செல்லும்.

இதனால்,மீனவர்கள் இன்று மற்றும் 11,12 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி,வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.மேலும்,தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும்”என தெரிவித்துள்ளார்.