வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

coimbatoreelephant elephantdiesofinjury
By Swetha Subash Mar 24, 2022 11:48 AM GMT
Swetha Subash

Swetha Subash

in இயற்கை
Report

கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாணிக்கண்டி கிராமத்திற்கு அருகில் 10 வயது பெண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கடந்த 20-ம் தேதி உடல் நல குறைவான யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் நேற்று காலை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்.

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | 10Yrold Elephant Dies Of Injury In Coimbatore

கடந்த 3 வாரங்களுக்கு மேலாக உணவு உட்கொள்ளாமல் சுற்றி திரிந்துள்ளது.

யானைக்கு வாயில் காயம் எப்படி ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க யானையின் வாய் பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறது.

மேலும் யானைக்கு வனத்துறை மருத்துவர் குழு என 50-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்த 10 வயது பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | 10Yrold Elephant Dies Of Injury In Coimbatore

இருப்பினும் யானையின் உடல் நிலை மிகவும் மோசமாகி முன்னேற்றம் ஏற்படாமல் இருந்ததால் இன்று யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து.

கோவையில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் யானைகள் உயிரிழப்பு வன ஆர்வளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.